Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, August 20, 2017

காணாமல் போனோரது உறவுகளுக்கு அச்சுறுத்தல்

Sri Lanka, Anuradhapura. The Buddhist flag in front of Ruwanwelisaya Stupa, sacred to Buddhists around the world. Stock Photo
Published by RasmilaD on 2017-08-19
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.எமது பாதுகாப்புக்கு  அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோகராசா கனக ரஞ்சனி தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளரான மரிய ஈஸ்வரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இந்த தாய் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரை தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு மாலை நேரத்தில் தனது வீட்டுக்கு செல்லும் வழியில், இனந்தெரியாத 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து இடைமறித்து தாக்கியதுடன் இந்த போராட்டத்தில் இதற்கு பின்னர் கலந்துகொண்டால் கணவருக்கு இடம்பெற்ற நிலையே பிள்ளைகளுக்கும் இடம்பெறும் என அச்சுறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நாங்கள் இன்று (நேற்று முன்தினம்) கொழும்புக்கு வந்து எமது கோரிக்கைகளை ஊடகங்கள் ஊடாக தென்னிலங்கை எமது உறவுகளுக்கு தெரியப்படுத்த முன் வந்துள்ளோம். ஆனால் நாங்கள் மீண்டும் எமது வீடுகளுக்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு எமது போராட்டத்துக்கு இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. அத்துடன் எமது உற­வு­களை தேடும்­போ­ராட்­டத்தில் அர­சாங்­கத்தின் எந்த பாது­காப்பும் எமக்­கில்லை. அர­சாங்கம் அமைத்­தி­ருக்கும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக கண்­ட­றியும் அலு­வ­ல­கத்­துக்கு சாட்­சி­ய­ம­ளிக்க வரு­ப­வர்­களின் பாது­காப்பு தொடர்­பாக அர­சாங்கம் எந்த உத்­த­ர­வா­தத்­தையும் இது­வரை அளித்­த­தில்லை.
அத்­துடன் அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட எமது உற­வி­னர்­களை மீள எம்மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறே நாங்கள் போரா­டு­கின்றோம். இந்­நி­லையில் எமக்கும் எமது உற­வி­னர்­க­ளுக்கும் இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் விடுக்­கப்­படும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு  அரசாங்கம் அளிக்கும் உத்தரவாதம் என்ன என்று கேட்கின்றோம் என்றார்.