Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, September 30, 2014

அல்வத்தைப் பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய பிக்குகள்; அச்சத்தில் மக்கள்

HomeTue, 09/30/2014
மாத்தளை பண்டாரவளைக்கு அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று இறத்தோட்டை பிரதேச  சபை உறுப்பினர் திலக்குமார சிறி தெரிவித்தார்.
 
அல்வத்தைப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற 50 ஏக்கர் காணிப் பகுதியிலேயே மேற்படி ஆயுதம் தாங்கியோரின் நடமாட்டம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
இறத்தோட்டை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் 29 ஆம் திகதி காலை அதன் தலைவர் ஜயந்த புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற போதே உறுப்பினர் குமாரசிறி இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்;
 
கடந்த சில தினங்களாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்வத்தைப் பகுதியில் சீருடை தரித்த பிக்குமார் சிலர் துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் நடமாடித் திரிகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பீதிக் குள்ளாகியுள்ளனர். உயர் ரக வாகனங்களில் வந்திறங்கும் இவர்கள் இங்கு கைவிடப்பட்ட நிலையிலுள்ள சுமார் 50 ஏக்கர் காணிப் பகுதியிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இது பற்றி பொலிஸாரிடம் நான் முறைப்பாடு செய்திருந்தேன். இதனால் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கொலை பயமுறுத்தல் செய்யப்பட்டு எனது பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
 
குறிப்பிட்ட காணிப் பகுதியின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இக்காணிப் பகுதியில் விஜயபால மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட குகையுடன் கூடிய சுரங்கப்பாதையொன்று இருப்பதாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உண்டு. இங்கு ஏதேனும் புதையல் இருக்கலாம் என்றும் அதை தோண்டி எடுப்பதற்கே இந்த ஆயுததாரிகள் முயன்று வருவதாக மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எது எப்படியாயினும் சீவர உடை தரித்துக்கொண்டு பயங்கர துப்பாக்கிகளை பகிரங்கமாகவே ஏந்தித் திரிவதும் அதன் காரணமாக மக்கள் மத்தியில் திகிலை உருவாக்குவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, பிரதேச சபை இவ்விடயத்தில் தலையிட்டு மக்கள் மத்தியில் அமைதிச் சூழலை ஏற்படுத்த முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.